செய்திகள்

BOIயின் கீழுள்ள தொழிற்சாலைகளை ஆரம்பிக்க யோசனை

இலங்கை முதலீட்டு சபைக்கு கீழுள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கமைய பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றி தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தொழிற்சாலைகளை நடத்திச் செல்வதற்காக ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக ranjithd@boi.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்குமாறு முதலீட்டு வலயத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். -(3)