செய்திகள்

வித்தியா கொலையை கண்டித்து களுவாஞ்சிக்குடியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

ஒரு வாரத்தினையும் தாண்டி புங்குடுதீவில் மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களினாலும் பொது அமைப்புகளினாலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு, பட்டிருப்பு தேசிய பாடசாலையின் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று  திங்கட்கிழமை பாடசாலையின் முன்றிலில் நடாத்தப்பட்டது.

வித்தியாவின் புகைப்படம் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை கொலையாளிகளுக்கு தெரிவித்தனர்.

இதேபோன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் தாதியர்கள்,வைத்தியர்களும் புங்குடுதீவில் மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் கு.சுகுணன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இறுதியாக பட்டிருப்ப தேசிய பாடசாலை அதிபர் வன்னியசிங்கம் மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சர் சுகுணன் ஆகியோரினால் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னத்திடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

DSC_0954 DSC_0955 DSC_0957