செய்திகள்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமெரிக்காவிற்கு பயணமானார்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு பயணமானார்.

அமெரிக்காவிலுள்ள தமிழ் மக்களின் அழைப்பின்போரில் அங்கு செல்லும் முதலமைச்சர் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

ஜுலை 3,4 ஆம் திகதிகளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் தமிழகத்திலிருந்தும் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவிருப்பதுடன் புலம்பெயர்;ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும் பங்கேற்றவுள்ளனர். அமெரிக்காவில் இருவாரங்கள் தங்கியிருக்கும் முதலமைச்சர் இலங்கைப் பயணங்களின் போது வடபகுதிக்கு வருகை தந்து தன்னைச் சந்தித்திருந்த அமெரிக்க இராஜதந்தரிகள் ஐ.நா. அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பயணத்தின் பின்னர் பிரிட்டன் செல்லவுள்ள முதலமைச்சர் அங்கும் பல முக்கிய சந்திப்புக்களை நடத்துவார் எனவும்  தெரியவருகிறது.