செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளர் கிடையாது : ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளர் என யாரும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளடங்கலாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றிப்பெற்றால்  அந்த கட்சியின் உறுப்பினர்களின் ஆலோசனைக்கமையவே பிரதமர் நியமிக்கப்படுவார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் வேட்பாளர் என கட்சியின் தலைவரான ஜனாதிபதியினால் எந்தவொரு அறிவித்தலும் இது வரை விடுக்கவில்லை. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.