செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் : பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் பயங்கரவாதிகள் போன்று காணப்படுவதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அவரால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரை சுயாதீன குழுவாக அங்கீகரிக்க முடியாது. அப்படியென்றால் அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சியிலிருந்து விலகியதாக அறிவிக்க வேண்டும். இதனை விடுத்து கட்சியில் இருந்துக்கொண்டு அவ்வாறு கூற முடியாது. இவர்களின் செயற்பாடுகள் பயங்கரவாதிகளை போன்றது. ஒருபோதும் இவர்களின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அது ஜனநாயக விரோத செயலே. என அவர் தெரிவித்துள்ளார்.