அரசியலமைப்புச் சீர்திருத்த பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அமர்வுகள் இன்று
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அமர்வுகள் இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது.
இன்று காலை அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி என்.செல்வகுமாரன் தலைமையில் ஐந்து பேரடங்கிய குழவினர் இந்த அமர்வினை நடாத்திவருகின்றனர்.
இந்த அமர்வுகள் இன:று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானதுடன் மாலை 4.30 மணிவரையில் நடைபெறும்.
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்து மூல சமர்ப்பணங்களை பெறும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகி;ன்றன.
இந்த அமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதுடன் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன் இருபது உறுப்பினர்களை கொண்டதாக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
n10







