செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு பாதாள குழுவினால் அச்சுறுத்தல் : பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதாள உலக குழுவினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்  பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்டுகம்பொல பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் பல்வேறு இடங்களில் பாதாள கும்பலின் செயற்பாடுகள் காணப்பட்டது. அவர்கள் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பின்னணியிலேயே செயற்பட்டனர்.
எவ்வாறாயினும் அந்த குழுவினரால் ஒன்றிணைந்த எதிரக்கட்சி உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் எமது பயணத்தை நாம் கைவிடப்போவதில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.
N5