செய்திகள்

வவுனியா நீதிமன்ற வளாகத்தில் ஐனவரி மாதம் முதல் 68 பேர் சமுதாயஞ் சார் சீர் திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா நீதிமன்ற வளாகத்தில் கடந்த ஐனவரி மாதம் முதல் 68 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்கள் சமுதாயம் சார் சீர்த்திருத்த கடடளைச்சட்டத்தின் கீழ் சமுதாயஞ் சார் சீர் திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஐனவரி மாதம் முதல் வவுனியா நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா வைத்திருந்தமை மதுபோதையில் அசௌகரியமாக நடந்து கொண்டமை போன்ற பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட 68 வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்ற வளாகத்தின் கட்டளைக்கு அமைவாக சமுதாயஞ்சார்  சீர்திருத்த கட்டளைச் சட்டத்தின் கீழ் சமுதாஞ்சார் சீர் திருத்த கட்டளைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்குகள் வழங்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்த அவர் இவர்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு அரச திணைக்களங்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
N5