தொழிலாளர் தேசிய சங்கத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் 20.03.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கட்சியின் மகளிர் அணி தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தலைமையில் “மலையக பெண்களே விழித்தெழுவோம் மகளிரை அரசியலில் வளர்த்தெடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றது.
மேற்படி மகளிர் தின நிகழ்வில் சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் மற்றும் அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி,மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அட்டன் பிரின்ஸ் சந்தியிலிருந்து கலை நிகழ்ச்சிகளுடன் பெண்கள் பேரணியும் இடம்பெற்றது. அத்தோடு பெண்கள் கௌரவிப்பும், இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
N5