செய்திகள்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் துகள்கள் ஆப்ரிக்கக் கடற்கரைக்கு அப்பால் கிடைத்தது

இரண்டாண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த துகளாக இருக்கும் என்று கருதப்படும் , கிழக்கு ஆப்ரிக்கக் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட துண்டு ஒன்றை ஆராய்ந்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் இது அந்த விமானத்தின் உடைந்த பகுதியாக இருப்பது அதிக அளவில் சாத்தியமானதே என்று கூறுகின்றனர்.

கிடைத்த இரண்டு துண்டுகளை தொழில் நுட்பரீதியில் ஆராய்ந்ததில், இவை ஏறக்குறைய நிச்சயமாக , காணாமல் போன எம்.எச்.370 விமானத்தின் பகுதிகளாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்ததாக ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் டாரன் செஸ்டர் கூறினார்.

தெற்கு இந்தியப் பெருங்கடல் பரப்பில் சுமார் 25,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் கடலுக்குக் கீழே ஒரு தேடுதல் ஆய்வை மேற்கொள்ளும் பணி இன்னும் தொடங்கவில்லை என்று செஸ்டர் கூறினார்.

தென் ஆப்ரிக்காவிடமிருந்து அதன் கரையோரப் பகுதிகளில் மேலும் உடைந்த துகள்களைத் தேட அனுமதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்று மலேசியா கூறுகிறது.

எம்.எச்.370 விமானம் ஏறக்குறைய 240 பயணிகளுடன் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்லப் புறப்பட்டவுடன் காணாமல் போனது.

n10