செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வுகள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான காணுர்மல் போனோரை கண்டறியும் பரணகம ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வுகள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றன.

காணாமல் போனோரை கண்டறியும் பரணகம ஆணைக்குழுவின் 2ஆம் நாள் அமர்வுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பரணகம ஆணைக்குழு தலைவர் மகஸ்வல் பி.பரணகம தலைமையில் நடைபெற்றது.

இவ் விசாரணை அமர்வுகளுக்காக 290 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. இவ் அமர்வின் போது சாட்சியமளித்தவர்களில் பலர் யுத்தத்தின் போது தமது உறவினர் கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும், இராணுவத்திடம் தங்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் இராணுவம் பிடித்தவர்கள் பற்றிய தகவல்கள் எவையும் இன்று வரை இல்லையெனவும் தெரிவித்துள்ளனர் .

இங்கு மகஸ்வல் பி.பரணகம, டயிள்யூ ஏ. ரி ரத்னாயக, சுரன்யனா விஜயரட்ண, எச்.சுமணபால ஆகியோரால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

நேற்றுமுன்தினம் 120 பேர் சாட்சியமளித்திருந்தனர். இதேவேளை புதிய பதிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

IMG_1739

IMG_1768 IMG_1739

N5