செய்திகள்

சோபித்த தேரரின் மரணத்தில் சந்தேகம் என கூறிய தம்மாலோக தேரரிடம் சீ.ஐ.டியினர் விசாரணை

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளரான மாதுலுபாவே சோபித்த தேரரின் மரணம் தொடர்பாக சந்தேகங்களை ஏற்படுத்தி கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பாக உடுவே தம்மாலோக தேரர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தம்மாலோக தேரரை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வருமாறு நேற்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதன்படி அங்கு சென்ற அவரிடம் அது தொடர்பாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டிய அபயாராம விகாரையில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின் போது மாதுலுபாவே சோபித்த தேரரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுமாகவிருந்தால் தனக்கு தெரிந்த சாட்சிகளை வழங்க முடியுமெனவும் தம்மாலோக தேரர் தெரிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

N5