செய்திகள்

வவுனியாவில் காணாமல்போனோர் தொடர்பான இரண்டாம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் விசாரணைகள் இரண்டாம் நாளாக இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.

வவுனியா பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மஸ்வல் பரணகம தலைமையில் ஆரம்பமான இவ் விசாரணைகளில் இன்று 218 பேருக்கு சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உத்தியோகத்தர் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றைய தினம் தினம் சாட்சியமளிப்பதற்காக 311 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் 163 பேரே சாட்சியம் அளித்திருந்ததுடன் 79 பேர் புதிதாக பதிவு செய்திருந்தனர்.

N5