செய்திகள்

சாவக்கச்சேரி வெடிப்பொருட்கள் விவகாரம் தொடர்பாக ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை : அரசாங்கம் தெரிவிப்பு

சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் கொழும்பு, ள்ளவத்தை பகுதிக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக  கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் வெளிவிகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளரான கயந்த கருணாதிலக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த வெடிப்பொருட்கள் புதியனவா அல்லது பழையனவா என்று கூட தெரியவில்லை. இதற்கிடையில், இந்த வெடிப்பொருட்கள் வெள்ளவத்தை பகுதிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்ததாக ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.  இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான பொருட்கள் கைப்பற்றப்பட்ட போது முன்னாள் அமைச்சர் பீரிஸ் அது பற்றி எந்த கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை. ஆனால், இந்த சம்பவம் தொடர்பில் மாத்திரம் அவை வெள்ளவத்தைக் கொண்டு வரப்பட இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இது பற்றிய தகவல் அறிந்து தானே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகவே, இந்த தகவல் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் பீரிஸிடம் விசாரணை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
n10