செய்திகள்

பாரீஸ் மத்திய குடியிருப்பு பகுதியில் வாயு கசிவு: தீ விபத்தால் 5 பேர் படுகாயம்

பாரீஸ் மத்திய குடியிருப்பு பகுதியில்  வாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மத்திய குடியிருப்பு பகுதியில் வாயு கசிவு காரணமாக  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், அருகில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தால் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. பாரீஸ் மத்திய பகுதியில் முதலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரீஸ் நகரில் செயின் டென்னிஸ் மைதானம், ஓட்டல் மற்றும் அதை சுற்றியுள்ள 7 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 124 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.