செய்திகள்

அரசியலமைப்பு சீர்திருத்த அறிக்கை தயாராகிறது

புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக பொதுமக்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக அரசியலமைப்பு குறித்து பொது மக்களின் கருத்துக்களை பெறும் குழு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு ஒருமாத காலம் தேவைப்படும் என்று அந்த குழுவின் செயலாளர் லால் விஜேயநாயக்க கூறினார்.

எவ்வாறாயின் பல்வேறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக மேலும் சில நாட்கள் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக லால் விஜேயநாயக்க மேலும் கூறினார்.

N5