செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்

ஜெனிவா சென்றுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற எம்.பிக்கள் குழுவொன்று அங்கு இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பந்துல குணவர்தன , டலஸ் அழகப்பெரும மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு முறையாக செயற்பட இடமளிக்கப்படுவதில்லையென ஜெனிவாவிலுள்ள சர்வதேச பாராளுமன்ற சங்கத்திடம் முறையிட்ட பின்னர் அங்குள்ள இலங்கையர்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
n10
1 2 12801685_10154059172383550_1354417530711829226_n