நாட்டில் ஏற்படுத்தப்படும் நல்லிணக்கம் பயங்கரவாதிகளுக்கு ஏற்றால் போல் இருக்கக் கூடாது : மஹிந்த
நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதை வரவேற்பதாகவும் ஆனால் அது பயங்கரவாதிகளுக்கு ஏற்றால் போல் அமையக் கூடாது எனவும் பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் நல்லிணக்கம் என்பது இருக்க வேண்டும்தான் ஆனால் அது பயங்கரவாதிகளுக்குக தேவையானவாறு இருக்கக் கூடாது. இந்நிலையில் வடக்கு கிழக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முதல் கட்சியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேதே சிறந்தது. கட்சியில் உறுப்பினரை நீக்குகிறார்கள் , ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கின்றார்கள் இதனால் கட்சியில் முதலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
n10




