செய்திகள்

விமர்சனங்கள் , குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் செல்லாது நாட்டுக்காக பொறுப்புக்களை நிறைவேற்றுவேன் : ஜனாதிபதி சூளுரை

நாட்டுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்காகவே 2015 ஜனவரி 08 ஆம் திகதி இந்நாட்டு மக்கள் நாட்டின் பொறுப்புக்களைத் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எத்தகைய விமார்சனங்கள்இ குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் நாட்டுக்காக ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று (04) முற்பகல் பதுளை  வெலிமட ஸ்ரீ சங்ககிரி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நுழைவாயிலைத் திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.

புத்தபெருமானும் கூட நிந்தனைகளுக்குள்ளானதையும் மகாத்மா காந்தி போன்ற சிரேஷ்ட தலைவர்கள் நாட்டுக்காக பணி செய்தபோது பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானதையும் ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்தார்.

இன்று எமது நாடு முகங்கொடுத்திருப்பது உலகின் அபிவிருத்தி அடைந்து வரும் எல்லா  நாடுகளும் முகங்கொடுத்திருக்கும் பொது நிலைமையாகும் என்றும் அந்த எல்லா சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுத்து நாட்டு மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கை நிலைமைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களில் சமய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதிஇ அத்தகையதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சமயத்தாபனங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் பின்தங்கிய விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கும் அங்குள்ள பிக்குகளுக்குத் தேவையான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் ஒரு விசேட அரசாங்க நிதியத்தை ஆரம்பிக்கவுள்ளதோடுஇ ஏனைய சமயத்தாபனங்களின் அபிவிருத்திக்கும் தாம் அர்ப்பணிப்போடு உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

n10