செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தை விட பி.சி.சி.ஐ. மிகவும் ஆதரவாக இருக்கிறது: பிராவோ

இந்திய கிரிக்கெட் வாரியம் குறித்து பிராவோ கூறுகையில் “எங்கள் கிரிக்கெட் அட்டவணையை பார்த்தால், இந்த ஆண்டு எங்கள் நாட்டுக்கு வேறெந்த டி20 போட்டியும் திட்டமிடப்படவில்லை என்பது தெரியும். நான், கெயில், ரஸ்ஸல் யாரும் ஒரு நாள் போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் இருக்கிறது. ஆனால் நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதற்கு பதிலாக அந்த நேரத்தில் இங்கிலாந்து டி20 லீக்கில் விளையாடிக் கொண்டிருப்போம். எங்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் அன்பைப் பாருங்கள். எங்கள் வாரியத்தை விட பி.சி.சி.ஐ. எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டேரன் சமியை தொடர்ந்து, டுவைன் பிராவோவும் தங்கள் கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார்.