செய்திகள்

பனாமாபைல்களால் பல அரசியல் தலைவர்கள் நெருக்கடியில்

வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி வைத்துள்ள பல உலக தலைவர்களின் விபரங்கள் பனாமா பைல்கள் மூலம் வெளியாகியுள்ளதை தொடர்ந்து பல நாடுகளில் எதிர்பாராத அரசியல் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.

பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப்பின் மூன்று புதல்வர்கள் லண்டனில் சொத்துக்களை வைத்திருக்கும் வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களுடன் (ழகக ளாழசந உழஅpயnநைள) தொடர்புகளை வைத்திருப்பது பனாமா பைல்கள் மூலம் தெரியவந்துள்ளது.பாக்கிஸ்தான் பிரதமரின் புதல்வர்கள் ஹ_சைன் மற்றும் ஹசனும்,மகள் மரியமும் வெளிநாடுகளிலுள்ள பல நிறுவனங்களுடன் தொடர்புகளை கொண்டுள்ளதை பனாமா பைல்கள் வெளிப்படுத்தியுள்ளன.இதேவேளை இதனை நியாப்படுத்தியுள்ள பிரதமர் தனது குடும்பத்தினர் எந்த வித தவறுகளையும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.அவரது புதல்வர்களும் தங்கள் நடவடிக்கைகள் சட்டபூர்வமானவை என தெரிவித்துள்ளனர்.பாக்கிஸ்தான் அரசாங்கம் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

பனாமாவை தளமாககொண்ட மொசாக்பொன்சேகா,ஜேர்மனியின் செய்தித்தாளொன்றிற்கு வழங்கிய பனாமா பைல்கள் என்ற 11மில்லியன் இரகசிய ஆவணங்கள் மூலம் இவ்வாறு வெளிநாடுகளில் சொத்துக்களை வைத்துள்ள பல சர்வதேச பிரமுகர்களினதும் அவர்களினது குடும்பத்தவர்களினதும், நெருங்கிய நண்பர்களினதும் பெயர் விபரங்கள் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

China US Xi's Tripசீனா

சீனா ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர் உட்பட அவரது அரசாங்கத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களுடன் (ழகக ளாழசந உழஅpயnநைள) தொடர்புகளை வைத்திருப்பது பனாமா பைல்கள் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து இது தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதிப்பதை சீனா. கட்டுப்படுத்ததொடங்கியுள்ளது.திங்கட்கிழமை முதல் இந்தவிவகாரம் தொடர்பாக சீனாவின் சமூக ஊடகங்களான சைனாவெய்போ மற்றும்வெசட் ஆகியவற்றில் வெளியான பல கருத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.பனா பைல்கள் மூலம் பகிரங்கமாகியுள்ள பெயர்களில் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் மைத்துனரின் பெயரும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்லாந்து
ஐஸ்லாந்து பிரதமர் வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களுடன்  தொடர்புகளை வைத்திருப்பது பனாமா பைல்கள் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர் பதவி விலகவேண்டும் என கோரி அந்தநாட்டின் பாராளுமன்றத்திற்கு வெளியே பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.அந்த நாட்டின் பிரதமரும் அவரது மனைவியும் வின்டிரிச் என்ற வெளிநாட்டு நிறுவனமொன்றின் உரிமையாளர்கள் என்பது தெரிய வந்துள்ளதை தொடர்ந்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ரஸ்யா
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு நெருக்கமானவர்கள் சட்டவிரோத பணப்பறிமாற்றத்தில் ஈடுபடுவது பனாமாபைல்கள் மூலம் தெரியவந்துள்ளது. பாங் ரொசியாவை மையமாகவைத்து இந்த சட்டவிரோ நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. ரஸ்யாவிற்கு வெளியே இயங்கும் நிறுவனங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.புட்டினின் நெருங்கிய நண்பர்களிற்கு சொந்தமான இன்டர்நசனல் மீடியா ஓவர்சீஸ், சொனட்டா ஓவர்சீஸ்போன்ற நிறுவனங்களே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.