செய்திகள்

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள 43 பாடசாலைகளில் 76 ஆசிரியர்கள் பற்றாக்குறை

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள 43 பாடசாலைகளில் 76 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக வலயக்கல்வித் திணைக்களத்தகவல்கள் தெரிவிக்;கின்றன.

கிளிநொச்சி கல்வி வலயத்;திற்குட்பட்ட 104 பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 11 வரையான வகுப்;பறைகளைக் கொண்ட 43 பாடசாலைகளல் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய முக்கிய பாடங்களை கற்பிப்பதற்கு 76 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளன.

அதாவது தற்போது விஞ்ஞான பாடத்திற்கு 35 ஆசிரியர்களும் கணித பாடத்திற்கு 21 ஆசிரியர்களும் ஆங்கில பாடத்;திற்கு 20 ஆசிரியர்;களும் என 76 ஆசிரிர்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக வலயக்கல்வித்திணைக்கள தகவல்;கள் தெரிவிக்கின்றன.

இவ் ஆசிரியர்; பற்றாக்குறைகள் தொடர்பான விபரங்கள் வடமாகாண கல்வி அமைச்சு வடமாகாண கல்வித்திணைக்களம் ஆகியவற்றிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.