செய்திகள்

தமிழ் மக்கள் பேரவையின் வரைவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வின் முன்மொழிவு வரைவு தீர்வு திட்டம் இன்று ஏகமனதாக வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய வைத்திய கலாநிதி ப.லக்ஸ்மன் தெரிவித்தார்.

இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அச்சு பிரதிகளையும் மிக விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் நான்காவது அமர்வு இன்று யாழ் பொதுநுலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே லக்ஸ்மன் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

n10