செய்திகள்

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்ததில் பங்குகொண்டு அவயங்களை இழந்துள்ள முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பாலகன் மேற்கொண்டுவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 விசேட தேவையுடைய முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இலண்டனை தளமாக கொண்;டுள்ள பாலகன் கல்வி அபிவிருத்தி கழகத்தின் 24 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் பாலகன் கல்வி அபிவிருத்தி கழகத்தின் கிழக்கு மாகாண கிளையினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை,நெல்லுச்சேனை பிரதேசத்தில் உள்ள அவயங்களை இழந்துள்ள போராளிகளுக்கு வாழ்வதார உதவியாக பசு மாடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

பாலகன் கல்வி அபிவிருத்தி கழகத்தின் கிழக்கு மாகாண கிளை தலைவர் ச.அண்ணாத்துரை,திட்ட விரிவாக்கல்பிரிவின் இணைப்பாளர் கு.குகன் ஆகியோர் இவற்றினை வழங்கிவைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு கவனிப்பாறற்ற நிலையில் பல போராளிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

n10jk