செய்திகள்

சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பாக பரிசீலிக்கப்படுகின்றது: இரா.சம்பந்தன்

இந்தியாவின் தேசிய நிலக்கரி மின் உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன இணைந்து திருகோணமலை – சம்பூரில் ஒரு நிலக்கரி அனல் மின்நிலையம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில், சம்பூரில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்களது இடங்களில் இந்த மின்நிலையம் அமைவதை எதிர்த்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தனிடம் ஊடகவியலாளர்களால் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பாக இந்தியாவுடன் நான் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றேன் இயற்கைக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் பாதிப்பை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து ஆராயப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனல் மின்நிலையம் தொடர்பாக மக்களுக்கு தீமை ஏற்படக்கூடாது. அங்கு மக்கள்தான் வாழப்போகின்றார்கள் ஆகவே நான் ஒருபோதும் மக்களை கைவிட மாட்டேன் என அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தியா பல்வேறு தொழில் நிறுவனங்களை வடக்கில் அமைக்கவிருக்கின்றது குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் அமைக்கப்படும் இதனால் பலருக்கு தொழில் வாய்ப்பு இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, நாம் எதையும் உடனடியாக தூக்கி எறிந்து விடமுடியாது. பொதுமக்களுக்கு பாதிப்பு வராத வகையில் நான் கருமங்களை நிறைவேற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

N5