செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதின கூட்டத்திற்கு செல்ல மஹிந்த தீர்மானம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்திற்கான அழைப்பு தனக்கு கிடைத்துள்ளதாகவும் அதனை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதின கூட்டத்திற்கான அழைப்பிதழ் கிடைத்துள்ளது. ஆனால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அழைப்பு ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அழைப்பு வந்தால் அதில் கலந்துக்கொள்வீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் ஏற்கனவே தான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அழைப்பை ஏற்றுவிட்டேன். என தெரிவித்துள்ளார்.

N5