செய்திகள்

சாவகச்சேரியில் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர் 4 ஆம் மாடியில் தடுத்துவைப்பு

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கியுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டு வெள்ளைவானில் கடத்தபட்ட நபரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் 4 ஆம் மாடியில் உறவினர்கள் பார்வையிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசதுரை ஜெயந்தன் என்பவரை உறவினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்துள்ளனர்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட மற்றைய நபரான மட்டக்களப்பை சேர்ந்த சுப்பிரமணியம் – தேவதாசன் என்பவரையும் அவரது உறவினர்கள் இன்று 4 ஆம் மாடியில் பார்வையிட்டுள்ளனர்.

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்காலை அங்கியுடன் தொடர்புடையவர் என சநச்தேகிக்கப்படும் நபருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு 4 ஆம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் நாளை திங்கட்கிழமை முறைப்பாடு செய்யவுள்ளதாக, இருவரையும் பார்வையிட்ட பின்னர் உறவினர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை அங்கியுடன் தொடர்புடையவர் என கருத்தப்படும் நபருடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் இதுவரை வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
R-06