செய்திகள்

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மருத்துவ நிதி அன்பளிப்பு

அல்லாரை வடக்கு கொடிகாமத்தில் வசித்து வரும் அனுசியாவின் குடும்பம் வாழ்க்கையில் எண்ண முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனார்.
கடந்த 2014ம் ஆண்டு இடம்பெற்ற சமூக வன்முறையின் போது தனது அண்ணாவையும் இழந்து தவிக்கும் அனுசியாவின் தாய் ஒர் நரம்புத் தளர்ச்சி நோயளி மகனின் இழப்பினை தாங்க முடியாத தகப்பன் ஒர் மனநோயளி இதற்கு மேல் அவரது தங்கை அயினா நான்கு வயதிலேயே ஒரு நாளைக்கு இரு ஊசி போடும் அளவிற்கு நீரிழிவு நோயளி இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் அனுசியா உயர்தரத்தில் சித்தி பெற்று மட்டகளப்பு விபுலானந்த கல்வியியற் கல்லூரிக்கு நேர்முகத் தேர்வு வரை சென்றுள்ளார்.
தாய் தகப்பன் மற்றும் தங்கை குடும்பத்தில் உள்ள மூவருமே நோயாளிகள் மாதந்தம் கிளினிக் மற்றும் தங்கைக்கு ஒவ்வொரு நாளும் இரு ஊசி என்ற நிலையில் அனுசியாவின் குடும்பம் ஒவ்வொரு நாளும் வாழ்க்கைப் போரட்டத்தில் அவதியுற்று வரும் நிலையில் எமது சங்கத்தின் செயற்பாடுகளை அறிந்த அனுசியா மருத்துவத்திற்கான உதவி கோரியிருந்தார். இவரின் குடும்ப நிலை அவர்களின் வாழ்க்கை போராட்டத்தின் நிலை அறிந்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் நேற்றைய தினம் சங்க தலைமை காரியாலத்தில் வைத்து மருத்துவச் செலவிற்காக 20000 நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது..
n10