செய்திகள்

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எந்த இலக்கில் பயணிக்கின்றார்? சுரேஷ் கேள்வி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எந்த இலக்கை நோக்கி பயணிக்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த சம்பந்தன் தெரிவித்த சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

“இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைபின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டது. குறித்த யோசனை வடமாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிப்பதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் சம்பந்தன் எந்த இலக்கை நோக்கி பயணிக்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என தெரிவித்த சுரேஸ் பிரேமசந்திரன்,

சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பாக சம்மந்தன் தெரிவித்த கருத்துக்களையிட்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான திறப்பு என்னிடம் இல்லை என சம்பந்தன் தெரிவித்திருப்பது, கைதிகளையும் அவர்களுடைய குடும்பங்களையும் புண்படுத்துவதாக அமைந்திருக்கின்றது எனவும் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.
R-06