செய்திகள்

சரியான முறையில் திட்டமிடப்படாத எந்த ஒரு அபிவிருத்தியும் எந்த ஒரு வேலைத்திட்டமும் வெற்றியடையாது

சரியான முறையில் திட்டமிடப்படாத  எந்த ஒரு அபிவிருத்தியும் எந்த ஒரு வேலைத்திட்டமும் வெற்றியடையாது என்பது எங்களுடைய வரலாற்று உண்மையென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்   தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தின் ஏற்பாட்டில். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் நேற்று   நடைபெற்ற அபிவிருத்தி திட்டம் தாயரித்தல் தொடர்பான பயிற்சி நெறியின் தொடக்க நிகழ்வில் கலந்து உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமாநயகம் அவர்கள் இந்த 2016ம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அதிஸ்ரமான ஆண்டாக அமைந்துள்ளது.
2016ம்ஆண்டில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பல ஆயிரக்கான நிதிகள் வந்து சேரவுள்ளன.
வீட்டுத்திட்டங்கள் வாழ்வாதார நடவடிக்கைகள் உட்கட்டமைப்புக்கள் சுகாதார வசதிகளுக்காக மற்றும் பல சமுக அபிவிருத்திகள் எனப்பல துறைசார்ந்த அபிவிருத்தி வேலைகளுக்கு நிதிகள் கிடைக்கவுள்ளன.
யுத்தம் முடிவுற்று பல வருடங்கள் கடந்த போதும் கூட மாவட்டத்தினுடைய அபிவிருத்தி முன்னேறவில்லை என்பது வெளிப்படையானது. எனவே இவ்வாறான தருணத்தில் இவ்வாறான உதவிகள் கிடைக்கப்பெறுவதனூடாக இதை செயற்படுத்தும் ஓர் ஆண்டாக இந்த ஆண்டை பார்க்கக்கூடியதாகவுள்ளது.
எவ்வாறான நிதிகள் எத்தனை ஆயிரம் நிதிகள் வந்;து சேர்ந்தாலும் அவற்றை சரியான முறையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதில் தான்அதனுடைய உண்மையான நோக்கம் நிறைவேறும் நிதிகளை செலவளிப்பது என்பது முக்கியமல்ல. நிதிகளை நாங்கள் எவ்வாறு செலவளிக்கப்;போகின்றோம் என்பது தான் முக்கியம்.
சரியான முறையில் திட்டமிடப்படாத எந்த ஒரு அபிவிருத்தியும் எந்த ஒரு வேலைத்திட்டமும் வெற்றியடையாது என்பது எங்களது வரலாற்று உண்மை. எங்களுக்காக எதிர்காலத்தில் கிடைக்கின்ற அல்லது கிடைத்திருக்கின்ற நிதிகளை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் எங்களுடைய திட்டமிடப்பட்ட அபிவிருத்தி இலக்கை அடையமுடியும் என்ற தளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இப்பயிற்சி நெறி அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தியை கருத்திற்கொண்டு அபிவிருத்தி திட்டம் தயாரித்தல் தொடர்பாக நேற்று (19-04-2016) கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் ஆரம்பமான 5 நாள் பயிற்சியின் ஆரம்பநிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தின் ஏற்பாட்டாளர் சுவர்ணலிங்கம் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் உதவிப்பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள் வாழ்வின்எழுச்சித்;திட்ட உத்தியோகத்தர்கள், கிராம சேவைகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.
n