செய்திகள்

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுவதுடன் சிறுவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாகி வருகின்ற நிலையும் காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம், கல்மடுநகர், வட்டக்கச்சி, தர்மபுரம் கல்;லாறு, புன்னைநீராவி, திருவையாறு, ஆகிய பகுதிகளிலும் ஊரியான், கோரக்கன்கட்டு, ஆகிய பகுதிகளிலும் சட்;டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இவ்வாறு கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுவதனால் மேற்குறித்த கிராமங்களில் பல்வேறு வகையான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதுடன் கூடுதலான சிறுவர்கள் கசிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறித்த கிராமங்களில் கடந்த காலங்களில் குறைவாக காணப்பட்ட மேற்படி சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்;க வேண்டும் என மேற்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

n10