செய்திகள்

அவுஸ்திரெலியாவுக்கு படகில் செல்ல முயற்சித்த 9 பேர் கடற்படையினரிடம் சிக்கினர்

சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரெலியாவுக்கு செல்ல முயற்சித்த 9 பேர் நீர்கொழும்பு கடல் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியிலிருந்து சிறிய படகொன்றின் மூலம் இவர் பயணித்துக்கொண்டிருந்தபோது நீர்கொழும்பிலிருந்து 30 கடல் மைல் தூரத்தில் இவர்ககள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடையே 5 ஆண்களும் , சிறுவர்கள் இருவரும் , குழந்தையொன்றும் பெண்னொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடற்படையினரால் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

06

04

03