செய்திகள்

மல்யுத்த வீராங்கனை சைனா மர்ம மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

உலகப் புகழ்பெற்ற ரெஸ்ட்லிங் என்ற மல்யுத்த வீராங்கனை சைனா,  அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. சைனாவின் இந்த மர்ம மரணம் மல்யுத்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1990 களில் மிகவும் பிரபலமான ரெஸ்ட்லிங் வீராங்கனையாக திகழ்ந்து வந்தவர் சைனா. இவரின் இயற்பெயர் ஜோனி லாரர். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் சைனாவுக்கு உண்டு. கடந்த பல ஆண்டுகளாக போட்டிகளில் எதிலும் கலந்துகொள்ளாத சைனா,  தனது கலிபோர்னிய பண்ணை வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில் திடீரென்று இன்று (புதன்) கலிபோர்னியா பண்ணை வீட்டில்,  மர்மமான முறையில் சைனா இறந்து கிடந்தார். அவரின் மரணத்திற்கு என்ன காரணம் என்று உறுதியாக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனாலும் அவருக்கு பல ஆண்டுகளாக போதை மருந்து பழக்கம் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.  சைனாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், அவரது மரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

n10