செய்திகள்

சம்பந்தன் , விக்கினேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்குமாறு பொதுபல சேனா அமைப்பினால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே தலைமையிலான குழுவினரால் இன்று பகல் பொலிஸ் தலைமையகத்தில் அந்த முறைப்பாடு தொடர்பான கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் மற்றும்  வடமாகாண முதலமைச்சர் ஆகியோர் இனவாதத்தை தூண்டும் வகையிலூன கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்குமாறும் கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன்  இனியும் அவர்கள் அவ்வாறான கருத்துக்கள் வெளியிடாதவாறு நடவடிக்கையெடுக்குமாறும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.
n10