செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு மே தின பேரணியை ஆரம்பிக்க மைதானம் இல்லையாம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்திற்கான பேரணியை ஆரம்பிக்கவென ஒதுக்கப்பட்டிருந்த நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்தை வழங்க முடியாது என திடீரென அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இதற்கு எதிராக 2 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் அந்த மைதானத்தின் நிர்வாகத்தினருக்கு சட்டத்தரணியூடாக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டம் கிருளப்பனையில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பேரணை நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள குறித்த மைதானத்திலிருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 n10