செய்திகள்

சமூக சுகாதார சேவையை விரைவில் உருவாக்க வேண்டும்

சமூக சுகாதார சேவை விரைவில் நாட்டில் நிறுவப்பட வேண்டும் என்று அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவிக்கின்றது.

சில நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க கூறினார்.

அதன்படி சமூக சுகாதார சேவை ஊடாக அவ்வாறான நோய்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதன் காரணமாக நோய் தடுப்பு பிரிவை பலப்படுத்துவதற்கு தேசிய சுகாதார வேலைத் திட்டத்தின் கீழ் சமூக சுகாதார சேவையை விரைவில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் காமினி குமாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

n10