செய்திகள்

வங்காளதேசம்: பட்டப்பகலில் பலகலைக்கழக பேராசிரியர் வெட்டிக் கொலை

வங்காளதேசத்தில் இன்று பலகலைக்கழக பேராசிரியரை ஒரு மர்ம கும்பல் பட்டப்பகலில் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வங்காளதேசம் நாட்டின் வடமேற்கில் உள்ள ராஜ்ஷாஹி பல்கலைக்கழகத்தில் ஆங்கில (இலக்கியம்) பேராசிரியராக பணியாற்றிவந்த ரிஸாவுல் கரிம் சித்திக்(58) இன்று காலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் வீச்சரிவாள்களால் அவரை வெட்டி சாய்த்தது.

கழுத்தில் மட்டும் மூன்று ஆழமான வெட்டுகள் விழுந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் மயங்கி சாய்ந்த சித்திக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலையின் பின்னணி தொடர்பாக போலீசார் விசாரித்துவரும் நிலையில், இந்த அட்டூழியத்துக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராஜ்ஷாஹி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.