செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 748 குடும்பங்கள் மீள்குடியேற்ற வேண்டியுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தில் 748 குடும்பங்கள் மீள்குடியேற்ற வேண்டியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியமர்வுகள் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 09ம்திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நாற்பத்;தி ஓராயிரத்து 934 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.

இந்நிலையில் 748குடும்பங்கள் மீள்குடியமர்விற்காக விண்ணப்பித்துள்ள போதும் குறித்த குடும்பங்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேறுவதற்காக 748 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன.

இதில் பூநகரி பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 336 குடும்பங்களுக்கு முழங்காவில் இரணைமாதா நகர் பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு வீட்டுத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது இரணைதீவிலுள்ள அவர்களது சொந்த காணிகளை வழங்கப்;படவேண்டியுள்ளது.

இவை தவிர கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவின் கீழ் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்;ள 748 குடும்பங்களில் 336 குடும்பங்களின் காணிகளை விடுவிக்கப்பட வேண்டியுள்ளதுடன் ஏனைய குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவேண்டியுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.