செய்திகள்

மலையகத்தில் மூன்று முக்கிய பிரச்சனைகள் உள்ளது: அமைச்சர் இராதகிருஸ்ணன்

மலையக மக்களுக்கு மூன்று முக்கிய பிரச்சினைகளாக தனி வீட்டு பிரச்சினை, கல்வி பிரச்சினை, தொழில்வாய்ப்பு பிரச்சினை காணப்படுகின்றது.

இதனை இந்திய அரசாங்கம் கவனத்திற்கொண்டு தீர்வினை பெற்று தரும்படி இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹாவை சுட்டிக்காட்டி கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பெருந்தோட்டங்களில் அமைக்கப்படும் 4000 வீட்டு திட்டத்தில் முதல் கட்டமாக 404 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் 24.04.2016 அன்று நுவரெலியா – பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்.

இந்தியா இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளது. 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியத்தை கைப்பற்றியதன் பின் 1816ஆம் ஆண்டு இந்தியா வம்சாவளிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட இம்மக்கள் புகையிரத வீதிகள், காடு, மலைகள், வாகனம் செல்லும் வீதிகள் என்பனவற்றை நிர்மாணிப்பதற்காக தொழிலாளர்களாக உள்வாங்கப்பட்டனர்.

சுமார் சரியாக 200 வருடங்களின் பின் பெருந்தொகையான வீடு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்களுக்கு என இந்திய அரசு தற்பொழுது வழங்கியுள்ளமை எமக்கு பெருமையை தருவதுடன் இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் தொடரும் உறவை புதுப்பிக்க இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹாவின் காலத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்படுகின்றமை வரவேற்கதக்க ஒன்றாகும்.

மலையக மக்களுக்கு பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் காணப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இதில் மூன்று பிரச்சினைகளாக லயத்தில் வாழும் மக்களுக்கு தனி வீடுகளை அமைத்து வாழ்வில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதேபோன்று ஒரு சமூகம் மேலொங்க வேண்டுமானால் கல்வி அறிவு முக்கியமாக அமைகின்றது.

இந்த கல்வியில் இடம்பெறும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அவ்வாறு படித்து விட்டு தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தொழிலா வாய்ப்பும் தனியாக தொழில் செய்யும் வாய்ப்பும் கிடைப்பட வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளையும் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் அதேவேளை இதற்கான தீர்வினை பெற்று தர இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹாவை கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு இலங்கையின் கல்வி வளர்ச்சி முன்னேற்றிக்கு பல்வேறு நிதி உதவிகளை வழங்கும் இந்தியா மலையக கல்வி வளர்ச்சிக்கு பாரிய நிதிகளை வழங்கி உதவுவதற்கு முன்வந்துள்ளது.

இவ்வாறாக பல பாடசாலைகள் அபிவிருத்தி ரீதியில் முன்னேற்றம் அடையும் சந்தரப்பம் உருவாகி உள்ளது. எனவே இவ்வாறாக எம்மை அபிவிருத்தி ரீதியில் முன்னேற்றமடைய செய்து கௌரவத்துடன் வாழும் வாழ்க்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவிகளை நாம் நன்றியுடன் வரவேற்கின்றோம் என தனது உரையில் அவர் மேலும் தெரிவித்தார்.

N5