செய்திகள்

யாழ். வந்த சுவீடன் வெளிவிவகார அமைச்சர் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோம் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை இன்று காலை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது

சுவீடன் வெளிவிவகார அமைச்சர் தனது விஜயத்தின் ஓரங்கமாக இன்று காலை யாழ்ப்பாணத்திற்குச் சென்றதுடன் யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடினார்.

09
R-06