செய்திகள்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: 5 மாகாணங்களிலும் டிரம்ப் அமோக வெற்றி

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் 5 மகாணங்களிலும் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஹிலாரி 4 மாகாணங்களில் வென்றார்.அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8ந் தேதி நடக்கிறது.  அதற்கான வேட்பாளர் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக  கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு  கட்சியில் டொனால்டு டிரம்பும் முன்னணியில்  உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கனெக்டிகட், டெலாவர், மேரிலேண்ட், பென்சில் வேனியா, ரோத் ஐலண்டு ஆகிய 5 மாகாணங்களில் கட்சி  நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் தேர்தல் நடந்தது.

இத்தேர்தலில் டிரம்ப் வெற்றியை  தடுக்க அவரை எதிர்த்து  போட்டியிடும் டெட் குரூஸ், ஜெயின் காசிக் ஆகியோர் கூட்டணி அமைத்து இருந்தனர். இருந்தும் நேற்று தேர்தல் நடந்த 5 மாகாணங்களிலும் டொனால்டு  டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம்  அவர் வேட்பாளர் தேர்வில் பெற வேண்டிய 1237 பிரதிநிதிகளின் ஓட்டுக்களை நெருங்கி விட்டார். எனவே, குயடிரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் தான் என அறிவித்து கொண்டார்.

நேற்று 5 மாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 4 மாகாணங்களில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் ரோத் ஐலேண்டில் மட்டும் வென்றார்.
இதன் மூலம் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.