செய்திகள்

இலங்கையின் இறுதி யுத்தத்துக்கு ராகுல் உதவினார்

இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராஹுல் காந்தி கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நிறைவடைந்த யுத்தத்திற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தின், தந்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் தமிழர் விடுதலை கட்சி ஆகியன இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளன.

இந்த இரண்டு கட்சிகளும் ராஹுல் காந்தியின் கோயம்புத்தூர் விஜயத்தை கண்டித்து கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளதோடு, காங்கிரஸ் கட்சியின் கொடிக்கு திருவள்ளுவர் பேரூந்து நிலையம் அருகில் எரியூட்ட முயற்சித்துள்ளதாகவும் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கம் ஸ்ரீலங்காவில் சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் ஆயுத விநியோகம், மற்றும் படையினருக்கு பயிற்சி உள்ளிட்ட உதவிகளை வழங்கியதோடு, கடந்த 2009ஆம் ஆண்டு தமிழினப் படுகொலைக்கு ஆலோசனை வழங்கியதாகவும் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சி ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளுக்கு பல வெளிநாடுகள் ஆதரவளித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் ரஹுல் காந்தியின் கோயம்புத்தூர் விஜயத்திற்கு எதிர்ப்பினை வெளியிடுவதாகவும், பல கட்சிகள் ஈழத்தமிழர் தொடர்பில் காங்கிரஸின் செயற்பாடுகளை மறந்துபோயுள்ளதாகவும் கே.இராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

n10