செய்திகள்

மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி பெண்கள் கடலில் இறங்கி ஆர்பாட்டம்: தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு

சிறைபிடிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும்  பாம்பன் பகுதி மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்கள்  கடலில் இறங்கி ஆர்பாட்டம் நடத்தினர்  .
கடந்த மாதம் 27  ந் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும்  பாம்பன் பகுதியைச் சேர்ந்த தீபக் அந்தோணி சந்தியா,கெனிஸ்டன் ஜேம்ஸ் அடைக்கலம்,பிரகாஷ் சேசுஇருதயம் ரட்சகர் உள்ளிட்ட 21 மீனவர்களையும் அவர்கள சென்ற மூன்று படகுகளையும் இலங்கை கடற்படையினர்  எல்லை தாண்டி மீனபிடித்தாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் இந்நிலையில் இன்று மீனவர்கள விடுவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மீனவக்குடும்பத்தினர்கள் காத்திருந்தனர் ஆனால்  இரண்டாவது முறையாக வரும் 25 ந் தேதிவரை மீண்டும் காவலை நிடித்தது மன்னார் நீதிமன்றம்.
மீனவர்களின் காவல் நீட்டிப்பை கன்டித்தும்  சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக மீட்டுத்தர வழியுறுத்தி இனறு தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டிணம்  கடற்கரைப்பகுதியில் படகுகள் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த   நூற்றுக்கும்  மேற்பட்ட  பெண்கள் கடலில் இறங்கி  ஆர்பாட்டம் நடத்தினார்கள் மேலும் வரும் சட்டமன்ற தேர்தலை புற்கணிக்க உள்ளதாகவும் தேர்தலுக்குள் மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க தவறினால் வாக்குபதிவு மையங்கள் முன்பு தற்கொலை செய்து கொள்வதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.IMG-20160511-WA0006
n10