செய்திகள்

சிங்கள மக்கள் இலங்கையில் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் சிறுபான்மை மக்களும் மகிழ்ச்சியாக வாழவேண்டும்

சிங்கள மக்கள் இலங்கையில் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் சிறுபான்மை மக்களும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று  நியுயோர்க்டைம்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில்
தெரிவித்துள்ள ஜனாதிபதி சிறிசேனா, புதிய அரசமைப்பு ஏற்கப்படுவதை மாத்திரம் உறுதிசெய்யப்போவதில்லை ஐக்கிய நாடுகளிற்கு வாக்குறுதியளித்த உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

நியுயோர்க் டைம்ஸின் கீதா ஆனந் மற்றும் தரிஸ்டா பஸ்டியனிற்கு அவர் அளித்துள்ள பேட்டியின் தமிழ் வடிவம்:

இலங்கையின் சுதந்திரவரலாற்றில் பாரிய தலைவலிக்கும் இரத்தக்களறிக்கும் காரணமாக காணப்பட்ட இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என இலங்கையின் அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக வாக்குறுதியளித்து வந்துள்ளனர்.

பெருமளவிற்கு பௌத்தர்களாக காணப்படும் இந்தியாவிலிருந்து வந்த சிங்களவர்கள் சிறுபான்மை தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களிற்கு சில அதிகாரத்தை விட்டுக்கொடுத்து அவர்களிற்கு சுயாட்சியை வழங்கவேண்டும் என பல குழுக்கள் பரிந்துரைசெய்துள்ளன. எனினும் தொடர்ந்து வந்த ஜனாதிபதிகள் இதனை செய்வதற்கு தவறியுள்ளனர்.

தற்போது இரு பிராதான கட்சிகளின் மிதவாதிகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தவர்கள் இணைந்து காணப்படும் கூட்டணியால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி இதனை செய்ய முனைகின்றனர். இலங்கையின் வரலாற்றில் மிகவும் பொன்னான சந்தர்ப்பம் என கருதப்படும் தருணத்தில் அவர் இதனை செய்ய முயல்கின்றார். நீண்ட கால இனநெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை 26 வருட உள்நாட்டு மோதலில் சிக்குண்டதுஇ2009 இல் இடம்பெற்ற ஈவிரக்கமற்ற யுத்தத்தை தொடர்ந்து அரசாங்கம் பிரிவினைவாத இயக்கத்தினை ஓடுக்கியதுஇஇதன்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். பாரிய மனித உரிமை மீறல்களிற்காக குற்றம்சாட்டப்பட்ட அரசாங்கம் பின்னர் 2015 இல் மைத்திரிபால சிறிசேனவினை கொண்டுவந்த கூட்டணியால் பதவி கவிழ்க்கப்பட்டது.

இதன்பின்னர் அதிகாரப்பகிர்வினை வழங்கும் புதிய அரசமைப்பு மாற்றத்திற்கு தனது சிங்கள மக்களை இணங்கச்செய்வதாக சிறிசேன வாக்குறுதியளித்துள்ளார்.இவ்வருட பிற்பகுதியில் சர்வஜன வாக்கெடுப்பொன்று இடம்பெறவுள்ளது. எனினும் விவசாயின் மகனான 65 வயது சிறிசேனவினால் இலங்கையை இறுதியாக சமாதான யுகத்திற்குள் இட்டுச்செல்ல முடியுமா என்பது குறித்து கேள்விகள் காணப்படுகின்றன.

நாங்கள் மக்களிற்கு முழுமையாக அதிகாரத்தை வழங்கமுயல்வோம் என ஜனாதிபதி சிறிசேனா கடந்த வாரம் நியுயோர்க்டைம்சிற்கு தெரிவித்தார்.எவரும் தமிழர்களிற்கு வழங்குவதற்காக சிங்களவர்களிடமிருந்து எதனையும் பறிக்கமுயலவில்லை எனஅ அவர் தெரிவித்தார்.

சிறிசேனாவின் நேர்மை குறித்து எந்தவித சந்தேகமும் இல்லை எனினும் மிகச்சிறந்த வாய்ப்பு கைநழுவி செல்வதாக சிலர் கருதுகின்றனர். பொதுக்கொள்கைகள் தொடர்பான முக்கிய விவகாரங்களில் உள்ளக இணக்கப்பாட்டை எட்டமுடியாத நிலையில் புதிய அரசாங்கம் காணப்படுகின்றது என கொழும்பை சேர்ந்த வெரிட்டே ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.மிதவாதிகளின் கருத்தொருமைப்பாடு மிகவும் பலவீனமான நிலையல் உள்ளதாகவும் அந்த மைப்பு தெரிவித்தது.

சிறிசேன எங்களிற்கு வழங்கிய பேட்டியில் தான் புதிய அரசமைப்பு ஏற்கப்படுவதை மாத்திரம் உறுதிசெய்யப்போவதில்லை ஐக்கிய நாடுகளிற்கு வாக்குறுதியளித்த உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஏற்படுத்துவேன் என தெரிவித்தார்.  2009 உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் 40இ000ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கியநாடுகள் மதிப்பிட்டுள்ளது.5000 ற்கும் மேற்பட்டவர்கள் காணமற்போயுள்ளதாக குடும்பங்கள் முறையிட்டுள்ளன.இதன் முலம் இலங்கை அதிகளவானவர்கள் காணமற்போன இரண்டாவது நாடாக காணப்படுகின்றது. எனக்கு அது மிகவும் கடினமான சவால் என்பது தெரியும் எனினும் நான் அதனை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தேன் என அவர் தெரிவித்தார்இசவாலை ஏற்றுக்கொள்ளும்போது கண்ணீர்விடாமல் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதனை சிரிப்புடன் எதிர்கொள்ளவேண்டும் என்றார் சிறிசேனா.  எனினும் நான் எல்லாவற்றையும் அவசரமாக கையாளும் நபர் அல்லஇது எனது கொள்கை என தெரிவித்தார்.

8-19-2011-46-no-chance-for-resettlement-in

சிறிசேனா தனது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது தனது இயல்பு என தெரிவித்ததுடன் அதற்கா தான் மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்ற உணவுவிடுதிக்கு சென்ற நான் அவர்களுடன் சேர்ந்து உணலு அருந்தி விட்டு எனது அதிகாரங்களை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என கேட்டேன்.  நான் அவர்களின் தோள்களில் கையைபோட்டு அவர்களது கைகளை எனது கைகளிற்குள் சேர்த்து வைத்துக்கொண்டு எனது அதிகாரங்களை எடுத்துக்கொள்ளுமாறு அவர்களை இணங்கச்செய்தேன் என்றார் அவர்.

அதேவேளை நாட்டின் அரசமைப்பு உருவாக்கும் முயற்சிகளை அவசரமாக முன்னெடுக்கவேண்டும் என நான் கருதவில்லை என தெரிவித்த சிறிசேனஇநாங்கள் அதனை வேகமான முன்னெடுத்தால் தீவிரவாத சக்திகள் அதனை பயன்படுத்தலாம் என்றார் புதிய அரசமைப்பிற்கு சிங்கள பெரும்பான்மையினர் ஆதரவளிப்பார்கள் என தான் நம்புவதாக சிறிசேன தெரிவித்தார்சிங்கள மக்கள் இலங்கையில் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் சிறுபான்மை மக்களும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என தான் அடிக்கடி தெரிவிப்பதை அவர் நியுயோர்க் டைம்சிற்கு நினைவுபடுத்தினார்.