செய்திகள்

முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபி

முள்வாய்க்காலில் இனட்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட உறவினர்கள் இன்று புதன்கிழமை தமது அன்புக்குரியவர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒரு தற்காலிக நினைவு ஸ்தூபி ஒன்றை அமைத்தனர்.

இந்த நினைவுஸ்தூபி இராணுவத்தினரால் நிர்மூலம் செய்யப்படும் என்று இதை ஏற்பாடு செய்த மக்கள் அஞ்சியதால் சிறிது நேரத்தின் பின்னர் இது பாதுகாப்பான ஒரு இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.