செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்டவிரோத வெள்ளை வான் கடத்தல்கள்

கிரவுண்ட் வியுஸ்

யாழ்ப்பாணம் நுணாவிலை சேர்ந்த இராசதுரை ஜெயந்தன் கடந்த மாதம் வெள்ளைவானில் கடத்தப்பட்டார், சில நாட்ள் தேடலிற்கு பின்னர் பயங்கரவாத விசாரணை பிரிவின் தடுப்பில் இருக்க கண்டுபிடிக்கப்பட்டார்.

ஏப்பிரல் 10 ம் திகதி பொலிஸார் என தம்மை குறிப்பிட்ட சீருடைய அணியாத சிலர் அவரை அழைத்துச்சென்றனர், அவ்வாறு அவரை அழைத்துச்சென்றவர்கள்,ஜெயந்தனை பூசாவிற்கு அல்லது வவுனியாவிற்கு வந்தால் பார்க்கலாம் என அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜெயந்தனுடன் உரையாடிய பின்னரே அவர் உயிருடன் இருப்தும் பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதும் அவரது குடும்பத்தினரிற்கு தெரியவந்துள்ளது.

அவர் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் கைதுசெய்யப்பட்டுள்ளார்,தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தோன்றுகின்றது,அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கபட்டுள்ளார், அவரை தடுத்து வைப்பதற்கான உத்தரவு மே 9 ம்திகதி வரையே வழங்கப்பட்டுள்ளது,என ஜெயந்தனின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள படி அவரை இன்னமும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை,மேலும் அவர் தனது சட்டத்தரணிகளை சந்திப்பதற்கான அனுமதியும் வழங்கப்படவில்லை.மேலும் அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து அதிகாரிகள் ஜெயந்தனின் குடும்பத்தினரிற்கு தவறான தகவல்களை வழங்கிவந்துள்ளனர்.

இதுதவிர அவரது குடும்பத்தவர்களிற்கு சொந்தமான மோட்டர்சைக்கிள்களை அதிகாரிகள் கொண்டுசென்றுள்ளனர். ஜெயந்தன் 2009ம் ஆண்டு ஓமந்தையில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து 2011 வரை தடுத்துவைக்கப்பட்டிருந்த ஓருவர்,பின்னர் அவர் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் இயங்கி புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டார், அதன் பின்னர் அவர் 2011 இல் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தற்போது உள்ள இடத்தில் வாழத்தொடங்கினர்.1996 இல் அவர்கள் இந்த இடத்திலிருந்தே இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜெயந்தன் 2011 ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட பின்னரும்புலனாய்வு பிரிவினர் அவரை தேடி பல தடைவ அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.குறிப்பாக அவர் விடுதலைசெய்யப்பட்ட முதல் ஆறு மாதங்களில் பல தடவைகள் அவர்கள் இவ்வாறு அவரை விசாரித்திருந்தனர்.எனினும் பின்னர் அவர்கள் இவ்வாறு அவரை விசாரிப்பதை நிறுத்தியிருந்தனர்.யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜெயந்தனின் இரு சகோதரர்களும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சீருடையின்றி இன்றி வந்தவர்கள்

குறிப்பிட்ட தினம் அன்று ஜெயந்தன் தனது வீட்டு வேலியை சரிசெய்துகொண்டிருந்த வேளை சீருடை அணியாத நால்வர் அவரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் ஜெயந்தன் அவர்களை தனது வீட்டின் முன்வாசலிற்கு அழைத்து வந்துள்ளார்,அவர்களுடன் சிங்களத்தில் உரையாடியுள்ளார்,ஜெயந்தனின் தாயாரும் . மனைவியும் கேட்ட கேள்விகளிற்கு பதிலளிக்காத அந்த நபர்கள்,ஜெயந்தனுடன் மாத்திரம் உரையாடியுள்ளனர்.

அவர்கள் தனது மகனுடன் உரையாடிக்கொண்டிருந்த வேளை மகனின் கைகளை இறுக்கமாக பிடித்திருந்ததால் அவர்களது நோக்கம் குறித்து தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாக ஜெயந்தன் தெரிவிக்கின்றார்.

அவர்கள் யார் என ஜெயந்தனின் குடும்பத்தவர்கள் கேள்வி எழுப்பிய வேளையும் ஜெயந்தன் குற்றமிழைத்தவர் போன்று அவர்கள் அவரது கையை இறுக்கமாக பிடித்திருந்ததாக குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.பின்னர் ஜெயந்தனிடம் தாங்கள் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளதாகவும் குடும்பத்தினரை அங்கிருந்து விலகிச்செல்லுமாறும் அவர்கள் கேட்டுள்ளனர்.

பின்னர் கதிரையொன்றில் ஜெயந்தனை இருத்திய அவர்கள் அவர்கள் அதிலிருந்து எழ முடியாதவாறு இறுக்கிப்பிடித்துள்ளனர். ஜெயந்தனின் சகோதரர் அவர்கள் தாங்கள் யார் என்பதை நிரூபிக்காமல் அவ்வாறு செய்ய முடியாது என தெரிவித்தவேளை அவரை அங்கிருந்து செல்லுமாறு அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

எனினும் ஜெயந்தனின் குடும்பத்தவர்கள் தொடர்ச்சியாக அவர்கள் யார் என கேள்வி எழுப்பிய வேளை தாங்கள் பொலிஸிலிருந்து வந்தவர்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஜெயந்தனின் தாயார் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்;பிய வேளை அவர்கள் தாங்கள் சீருடையில்லாமல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணைக்கு பின்னர் ஜெயந்தனின் வீட்டை சோதனையிட்ட அவர்கள் 5 கையடக்கத்தொலைபேசி பெட்டிகள் மற்றும் அந்த கையடக்கத் தொலைபேசிக்கான வாரண்டி அட்டைகள் என்பவற்றை வெளியில் கொண்டுவந்துள்ளனர். அதன் பின்னர் ஜெயந்தனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து பதிவுகளை மேற்கொண்ட அவர்கள் ஜெயந்தனின் கைத்தொலைபேசியை தவிர ஏனையவற்றை மீள வழங்கியுள்ளனர்.

பின்னர் ஜெயந்தனின் கைகளை கட்டிய அவர்கள் அவரது மனைவியிடம் ஓரு வாரத்திற்கு தேவையான ஜெயந்தனின் ஆடைகளை தருமாறு கோரியுள்ளனர்.

ஜெயந்தனின் தாயர் அவர்களின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய வேளை ஜெயந்தன் என்ன குற்றதம் செய்தார் என்பது அவரது குடும்பத்தவர்களிற்கு தெரியாமலிருக்கலாம்,ஆனால் தான் என்ன குற்றமிழைத்தார் என்பது ஜெயந்தனிற்கு தெரியும், அதனை தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.
777777777777777777777777
வெள்ளை வான் வந்தது
இதன் பின்னர் அந்த நபர்களில் ஓருவர் கையடக்கத்தொலைபேசி மூலம் அழைப்பினை மேற்கொண்டதை தொடர்ந்து வெள்ளை நிற வான் ஓன்று வந்துள்ளது அதில் மேலும் மூவர் காணப்பட்டுள்ளனர்,அதேவேளை மேலும் இருவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்துள்ளார்,வானில் வந்த ஓருவரிடம் ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன,சீருடையில் காணப்பட்ட அவர்கள் அனைவரும் வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.  அவர்களில் இருவர் ஜெயந்தனுடைய மற்றும் அவரது சகோதரருடைய மோட்டார்சைக்கிள்களை கொண்டு சென்றுள்ளனர்.

அவ்வாறு செல்வதற்கு முன்னதாக அவர்கள் இரண்டு மணித்தியாலங்களிற்கு பின்னர் அரியாலைக்கு வருமாறு ( அரியாலையில் உள்ள அம்மன் கோவில் ஓன்றிற்கு அருகில் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

ஜெயந்தனை தேடும் நடவடிக்கை

அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் ஜெயந்தனின் குடும்பத்தவர்கள் பொலிஸ் நிலையம் சென்று அங்கு முறைப்பாடு செய்துள்ளனர்,ஹயஸ் வானில் வந்தவர்கள் பொலிஸார் என அறிமுகப்படுத்திக்கொண்டு ஜெயந்தனை கொண்டு சென்றதாக தெரிவித்த அவர்கள் அந்த வாகனத்தின் இலக்கத்தகட்டின் விபரங்களையும் வழங்கியுள்ளனர்(69-1010) தங்கள் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிள்களை அவர்கள் எடுத்துச்சென்றதையும் பொலிஸாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தங்களிற்குள் விவாதித்த பொலிஸார், கடத்தியவர்கள் தாங்கள் பொலிஸார் என தெரிவித்துள்ளதாலும், ஓரு குறிப்பிட்ட இடத்தில் வந்து சந்திக்குமாறு உத்தரவிட்டுள்ளதாலும் தாங்கள் முறைப்பாடுகளை பதிய முடியாது என தெரிவித்துள்ளனர்.

ஜெயந்தன் குடும்பத்தினர் அரியாலையில் உள்ள குறிப்பிட்ட வீட்டிற்கு சென்ற வேளை அங்கு தங்கள் வீட்டிற்கு வந்த நபர் ஓருவரை கண்டுள்ளனர். அது ஓரு சேதமடைந்த வீடு,பொலிஸ் நிலையம் என்பதற்கான அறிவுறுத்தல் பலகைகள் எதுவும் இல்லை,என ஜெயந்தனின் குடும்பத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.தங்கள் வீட்டிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களை அவர்கள் கண்டுள்ளனர்.

ஜெயந்தனின் குடும்பத்தவர்கள் அங்கு காத்திருந்த வேளை அவர்களின் வீட்டிற்கு வந்த குறிப்பிட்ட வெள்ளை ஹயஸ் வான் யாழ்;ப்பாணத்திலிருந்து வந்துள்ளது. அதிலிருந்து இறங்கிய கடத்தல்காரர் ஓருவர் ஜெயந்தன் உள்ளேயிருப்பதாகவும் அவருடன் பேச முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.எனினும் வானிற்கு கருப்புகண்ணாடி பொருத்தப்பட்டிருந்ததால் ஜெயந்தன் உள்ளேயிருக்கின்றார் என்பதனை உறுதிசெய்ய முடியாத நிலை காணப்பட்டுள்ளது.

மேலும் கடத்தல்காரர்களில் ஒருவர் அரியாலையில் எதுவும் செய்ய முடியாது எனவும் வவுனியா வருமாறும் கோரியுள்ளார். ஜெயந்தனின் இரண்டு வயது மகள் தந்தையை பார்ப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரியவேளை அவர்கள் அதற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் 11 ம் திகதி வவுனியாவிற்கு சென்றுள்ளனர்,வவுனியாவில் கண்டிரோட்டில் தம்ரோ தளபாட கடைக்கு அருகில் உள்ள வீடொன்றிற்கு வருமாறு கடத்தல்காரர்கள் ஜெயந்தனின் குடும்பத்தவர்களை கேட்டுள்ளனர்,குறிப்பிட்ட பகுதி பொலிஸ் நிலையமொன்றிற்கு அருகில் காணப்பட்டதாகவும்,பலவீடுகள் காணப்பட்டதாகவும் ஜெயந்தனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்கள் போன்றவற்றை அங்கு காணமுடிந்துள்ளது.

அங்கு ஜெயந்தனின் குடும்பத்தவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்த நபர் ஒருவரை கண்டுள்ளனர். அவர் நீங்கள் ஜெயந்தனை பார்க்கவா வந்துள்ளீர்கள் என வினவியுள்ளார். அதன் பின்னர் மற்றுமொரு நபரிடம் சிங்களத்தில் உரையாடிய அவர் பின்னர் ஜெயந்தன் அங்கு இல்லை அவரை பூசாவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார். அவரை பூசாவிற்கு சென்று பார்க்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீடு
இதன் பின்னர் ஏப்பிரல் 12 ம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் ஒருவர் ஜெயந்தனை கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணை பிரிவில் சந்தித்துள்ளதை தெரியப்படுத்தியுள்ளார். மனித உரிமை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையில் வழமையான விஜயமொன்றின் போதே அவர் ஜெயந்தனை பார்த்துள்ளார்.