செய்திகள்
அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நியமிக்காதிருக்க பிரதமர் இணக்கம்
மத்தியவங்கி ஆளுனராக மீண்டும் அர்ஜுன மகேந்திரனை நியமிக்காது இருப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் அவர் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நியமிக்க வேண்டாமென தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து கேட்ட நிலையில் அதன்போது அவர் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதி சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி அரஜுன மகேந்திரன் தொடர்பான விசாரணை முடியும் வரை பதில் ஆணையாளர் ஒருவரை நியமித்து மகேந்திரனுககு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
R-06




