செய்திகள்
பொது மன்னிப்பு காலத்தில் 4600 இராணுவத்தினர் சேவையிலிருந்து விலகினர்
நீண்ட காலமாக சேவைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினருக்கான பொது மன்னிப்புக் காலத்தில் இது வரை முப்படைகளையும் சேர்ந்த 4600 பேர் சட்டப் பூர்வமாக சேவையிலிருந்து விலகிக்கொண்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிக்கேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
முப்படைக்குள் விடுமுறை இல்லாமல் நீண்டகாலமாக சேவைக்கு சமுகமளிக்காதவர்கள் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலகக்கூடிய வகையில்இம்மாதம் 13ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலம் பாதுகாப்பு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்படி பொது மன்னிப்புக் காலத்தில் இது வரை 4600 பேர் சட்டபூர்மாக சேவையிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர். இவர்களில் 4229 இராணுவ சிப்பாய்களும் , கடற்படையை சேரந்த 206 பேரும் , விமானப்படையை சேர்ந்த 165 பேரும் சட்டப்படி விலகியுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
R-06




