செய்திகள்
கம்மன்பிலவுக்கு எதிரான குற்றச்சாட்டு 17 வருடங்களுக்கு முற்பட்டதே : வீரவன்ச
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை கைது செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து உதய கம்மன்பிலவை கைது செய்துள்ளமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். ஒரு பக்கம் நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சி கண்டுள்ளதுடன் மறுபுறத்தில் பிரிவினைவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் பொருளதாரத்தையும் வீழ்ச்சி காண செய்து மக்கள் மீது அரசாங்கம் சுமைகளை சுமத்தி வருகின்றது. இந்நிலையி அரசாங்கம் தொடர்பாக மக்களின் எதிர்ப்புகள் ஆரம்பிக்கும் போது அதனை திசை திருப்பும் வகையில் தமக்கு எதிரானவர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் குரலை நிறுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதன் ஆரம்பமாகவே உதய கம்மன்பில கைது செய்யப்பட்டுள்ளார். இதுவேளை கம்மன்பிலவுக்கு எதிரான குற்றச்சாட்டு 17 வருடங்களுக்கு முற்பட்டதாகும். இந்நிலையில் போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. என அவர் தெரிவித்துள்ளார்.
R-06




