தலைப்பு செய்திகள்

திருமதி. அருட்பிரகாசம் விசுவாசம்- 31ம் நாள் நினைவஞ்சலியும் மதிய போசன அழைப்பும்

26995244_1549165005167282_229411421_n
பிறப்பு: 15.08.1934                            இறப்பு: 27.12.2017
நாட்கள் முப்பத்தொன்று ஆனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!

ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!

அன்னாரின் ஆத்ம இளைப்பாற்றிக்காக 26.01.2018 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு யாழ். மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி :
இல, 414, மத்தியூஸ் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்.
(0212221229)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *